Advertisment

தோனியுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கிய சென்னை அணி வீரர்கள்...

csk players

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் 13 -ஆவது ஐ.பி.எல் தொடர் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் இத்தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த ஒரு நெருக்கடியான சூழலுக்கு இடையே இத்தொடர் நடைபெறுவதால் பி.சி.சி.ஐ கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே சென்னை அணியில் ஒரு பந்துவீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அதனையடுத்து அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த 13 பேரைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின், அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவார்கள் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது.

Advertisment

அதன்படி தற்போது தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் ஒரு காணொளியை சென்னை அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கரோனா தொற்றால்பயிற்சியில்ஏற்பட்ட தொய்வு, ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகிய முன்னணி வீரர்களின் விலகல் என சற்று துவண்டுபோயிருந்த சென்னை அணியின் ரசிகர்களை இந்தக் காணொளி தற்போது உற்சாகமடையச் செய்துள்ளது.

Advertisment

CSK
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe