Advertisment

அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு கரோனா தொற்று இல்லை... சென்னை அணி நிர்வாகம் தகவல்!!! 

csk players

முதலில் உறுதி செய்யப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என சென்னை அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.

Advertisment

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடரானது இந்த மாதம் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் அமீரகத்தில் பயிற்சி எடுத்து வரும் சென்னை அணி வீரர்கள், உதவியாளர்கள் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சென்னை அணியால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. சென்னை அணி நிர்வாகமும் இதற்கான விளக்கம் கொடுத்தது. இந்நிலையில் சென்னை அணியின் சிஇஓ விஸ்வநாதன் முதலில் உறுதி செய்யப்பட 13 பேர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

Advertisment

கரோனா உறுதி செய்யப்பட்ட அந்த 13 பேரும் இரண்டு வாரதனிமைப்படுத்தலுக்கு தங்களை உட்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe