Advertisment

சென்னை வந்தடைந்தார் சுரேஷ் ரெய்னா...!

raina

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 13-ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை வந்தடைந்தார்.

Advertisment

கடந்த மார்ச் மாதம் தொடங்க வேண்டிய ஐ.பி.எல். போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், இந்தாண்டு ஐ.பி.எல். நடைபெறுவது கேள்விக்குறியானது. பின் ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த இருபது ஓவர் உலகக் கோப்பைதொடர் ரத்து செய்யப்பட்டதால், அந்த இடைப்பட்டகாலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 13- ஆவது ஐ.பி.எல். போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டது. அந்நாட்டு அரசின் அனுமதியும் கிடைத்ததால் செப்டம்பர் 19 -ஆம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அனைத்து அணி வீரர்களும் தொடருக்குத் தயாராகி வருகின்றன.

Advertisment

அந்த வகையில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை அணியின் முக்கிய வீரர்கள், சென்னையில் ஒரு வாரம் பயிற்சி மேற்கொண்டு அதன் பின்பு ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருப்பதாகச் சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி தோனி, தீபக் சஹார், மோனு குமார், பியூஷ் சாவ்லா ஆகிய வீரர்களும் சென்னையில்பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர்.

CSK
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe