Advertisment

துணைக்கேப்டன் யார்??? ரசிகர் கேள்விக்கு சென்னை அணி கொடுத்த விளக்கம்...

csk players

சென்னை அணியின் துணைக்கேப்டன் யார் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

சென்னை அணியின் துணை கேப்டனாக சுரேஷ் ரெய்னா இருந்து வந்தார். இந்தாண்டு நடைபெற இருக்கிற ஐபிஎல் தொடரில் இருந்து, ரெய்னா தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகி இருப்பதால் அவர் பங்கெடுக்க முடியாத சூழல் உள்ளது. இது ஒரு புறமிருக்க, மறுபுறம் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ரெய்னாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகின. இரு தரப்பும் இது குறித்து விளக்கம் அளித்தாலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் சென்னை அணியின் ரசிகர் ஒருவர், அணியின் துணைக்கேப்டன் யார் என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

Advertisment

அவரது கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம், 'புத்திசாலித்தனமுள்ள கேப்டன் இருக்கும்போது நமக்கென்ன பயம்' என பதிலளித்துள்ளது. தற்போது இந்தபதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெய்னா இத்தொடரில் விலகுவதாக அறிவித்து சில தினங்கள் கடந்த பின்னும், சென்னை அணி அவருக்கு பதில் அணியில் இடம் பிடிக்கக் கூடிய வீரர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரெய்னாவும் இந்ததொடரிலேயே நான் அணியில் இணைவதற்கு வாய்ப்புள்ளது என்பதை சூசகமாகதெரிவித்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.

CSK
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe