Advertisment

சி.எஸ்.கே.தான் இப்ப வரைக்கும் கிங்.. ஆனால் இன்று? - ஐ.பி.எல். போட்டி #20

ஐ.பி.எல். சீசன் 11ன் 20ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இந்தப் போட்டி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரண்டு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் விளையாடியமூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

CSk

கடைசியாக ஐதராபாத் அணி பஞ்சாப் உடன் மோதிய போட்டியில் படுதோல்வி அடைந்தது. அதுவரை அசைக்கமுடியாத அணியாக இருந்த ஐதராபாத், கிறிஸ் கெயிலின் 11 சிக்ஸர்களில் நிலைகுலைந்து போனது. வார்னர் - தவான் இணை முந்தைய சீசன்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் இயலாத்தன்மையை மறைத்து வந்தனர். ஆனால், இந்த சீசனில் முழு பொறுப்பும் தவான் மற்றும் கேப்டன் வில்லியம்சன் தலையில் இருப்பதால், ஐதராபாத் அணி சிறப்பாக ஆடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதுவரை, இந்த இரண்டு அணிகளும் மோதியுள்ள ஆறு போட்டிகளில் 4 - 2 என்ற கணக்கில் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. அதேசமயம், சொந்த மண்ணில் ஆடிய இரண்டு போட்டிகளில் 1 - 1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன. ஐதராபாத் அணியின் நட்சத்திர பவுலரான புவனேஷ்வர் குமாரிடம் இதுவரை ஒருமுறை கூட கேப்டன் தோனி தன் விக்கெட்டைப் பறிகொடுத்ததில்லை. இதெல்லாம் கடந்தகால நிலவரம் என்பதால், இப்போதுவரைக்கும் சி.எஸ்.கே.தான் கிங். ஆனால், இன்றைய போட்டி அந்த வரலாற்றை நீட்டிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ipl 2018 CSK
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe