Advertisment

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த சி.எஸ்.கே!

CSK kept the fans in suspense

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (12.05.2024) நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டிக்குச் செல்ல சென்னை அணிக்கு இந்த இந்த ஆட்டம் முக்கியமான ஒன்று ஆகும். இதனால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisment

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை ஸ்டேடியத்தில் சிறிது நேரம் காத்திருக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது எனவும் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அதே சமயம் இன்றைய போட்டி முடிந்ததும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பை தோணி அறிவிக்க வாய்ப்பு இருபதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில்சென்னையில் கடைசி மேட்ச் நடந்து முடியும் பொழுது அனைத்து பார்வையாளர்களுக்கும் டீ சர்ட், பந்துகள் தரப்படுவது வழக்கம். அதேபோல் அனைவருக்கும் மைதானத்தை சுற்றி வந்து டாடா காட்டிவிட்டு நன்றி சொல்வதும் வழக்கம். இதனால் கூட ரசிகர்களை ஸ்டேடியத்தில் காத்திருக்க சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருக்கலாம் என்று ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது.

IPL CSK
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe