Skip to main content

யுவராஜ் சிங் சிஎஸ்கே-வுக்கா? சிஎஸ்கே-வின் பிளான் என்ன?

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

ஒருபக்கம் ஐ.பி.எல். மைதானத்தின் பார்வையாளர்கள் பகுதியில் விசில் சத்தங்கள், டிரம் அடித்தல், “சி.எஸ்.கே. சி.எஸ்.கே. சி.எஸ்.கே.” மந்திரச் சொற்கள், “தோனி தோனி தோனி” கோஷங்கள் என உற்சாகத்தின் உச்சியில் இருக்கும் ரசிகர்கள்; மறுபக்கம் மைதானத்தில் ரெய்னாவின் சிக்ஸர்கள், தோனியின் அசத்தல் கேப்டன்ஷிப், பிராவோவின் ஆல்-ரவுண்ட் ஸ்கில், டூ பிளசிஸ் மற்றும் ஜடேஜாவின் டைவ் பீல்டிங் என ரசிகர்களின் உற்சாகத்தை சற்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளும் சி.எஸ்.கே. வீரர்கள். இப்படி ஒரு ஆதரவும், எதிர்பார்ப்பும் எந்தவொரு உள்ளூர் டி20 அணிக்கும் இருக்காது. அந்தளவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

 

cc

 

 

இங்கிலாந்தின் மார்க் வுட், கனிக்ஸ்க் சேத் மற்றும் கிஷித்ஸ் ஷர்மா என்ற இளம் உள்ளூர் வீரர்கள் ஆகியோரை விடுவித்துவிட்டு 2018-ல் அணியில் இருந்த மற்ற பழைய வீரர்களை தக்கவைத்தது சி.எஸ்.கே. அணி. ஐ.பி.எல். 2019 வீரர்கள் விடுவிப்பின்போது, மிகவும் குறைந்த வீரர்களை விடுவித்த அணி சி.எஸ்.கே.  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்தியாவை சேர்ந்த 15 வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் 8 பேரென தற்போதைய அணியில் 23 வீரர்கள் உள்ளனர். இன்னும் இரண்டு வீரர்களை ஏலத்தின்போது சி.எஸ்.கே. வாங்கலாம். ஆனால் உள்நாட்டு வீரர்களை மட்டுமே வாங்க முடியும். ஏனெனில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் ஏற்கனவே அணியில் நிரம்பிவிட்டது. இன்னும் சென்னை அணியின் பர்ஸில் எஞ்சியிருப்பது ரூ. 8.40 கோடி.

 

எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, டூ பிளசிஸ், ஷேன் வாட்சன், ரவிந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், இம்ரான் தஹிர், டேவிட் வில்லி, பிராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், லுங்கி நெகிடி, கேதர் ஜாதவ், கரன் ஷர்மா ஆகியோர் தக்கவைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த அணியே மிகவும் பலம் பொருந்திய வலுவான அணிதான். ஆனால் இன்னும் சில முன்னேற்றம் காண வேண்டிய இடங்கள் உள்ளன. 

 

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் யுவராஜ் சிங் சென்னை அணியில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் மும்பை அணி யுவராஜ் சிங்கை வாங்க வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் யுவராஜ் சிங்கை வாங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது. இதற்கு காரணம் அவருடைய கடந்தகால ஐ.பி.எல். ஸ்கோர்கள் மற்றும் அவரது ஃபிட்னஸ். 

 

ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை உள்நாட்டு வீரர் தீபக் சஹார் மிகவும் அருமையாக விளையாடினார். ஆனால், ஷர்டுல் தாகூர் விக்கெட்கள் எடுத்தாலும் எக்னாமி ரேட் 9+ என வைத்துள்ளார். மேலும், இங்கிலாந்தின் மார்க் வுட் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே ஒரு ஃபாஸ்ட் பவுலர் அணியின் முதன்மை தேவையாக உள்ளார். ஜெயதேவ் உனட்கட், ராஜ்னிஷ் குர்பானி, முஹம்மது சமி, மொஹித் ஷர்மா, வருண் ஆரோன் ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முற்படும்.   

 

ஜெயதேவ் உனட்கட் சென்றமுறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ. 11.50 கோடியில் வாங்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. 15 ஆட்டங்களில் அவர் 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். ஐ.பி.எல். 2019 ஏலத்திற்கு முன்னதாக அவர் விடுவிக்கப்பட்டார். அவரது தற்போதைய அடிப்படை விலை ரூ. 1.5 கோடி. அனுபவம் மிகுந்தவர், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர். சென்றமுறை ஏலத்தின்போது இவரை எடுக்க கடைசி வரை முயன்றது சென்னை அணி. இந்த முறை இவரை வாங்க முழுமுயற்சிகளையும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

வலுவான ஸ்பின், அசத்தல் ஒப்பனிங், நல்ல மிடில் ஆர்டர் என மற்ற துறைகள் சிறப்பாக உள்ளன. இருப்பினும், யாருக்காவது அடிபட்டால் பேக்-அப் வீரர்கள் தேவை. ஒரு ஃபாஸ்ட் பவுலரை தவிர, ஒரு பேக்-அப் பேட்ஸ்மேன் அல்லது பேக்-அப் பவுலரை வாங்க சென்னை அணி முயற்சிக்கும். வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் படேல், விஹாரி, மனன் வோஹ்ரா, முருகன் அஸ்வின், பிபுல் சர்மா, அங்கித் ஷர்மா, அன்மோல்ஃபீத் சிங், விராத் சிங், ஷிபம் துபே ஆகியோர் சென்னை அணியின் பார்வையில் இருக்கும் வீரர்கள். 

 

 

c

 

 

2018 ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தின்போது 30+ வயதுடையவர்களை அதிகம் எடுத்தது சி.எஸ்.கே. அணி. அணியின் இந்த திட்டத்தை மற்ற அணி ரசிகர்கள் பலர் ட்விட்டரில் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், ஐ.பி.எல்.கோப்பையை சி.எஸ்.கே. வென்று அசத்தியது. வயது முக்கியமல்ல, ஃபிட்னஸ்தான் முக்கியம் என்பதை உறுதிப்படுத்தியது. ஃபிளெமிங் மற்றும் தோனி கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறது. ஏலத்தில் சென்னை அணியின் திட்டம் சில ஆச்சரியங்களை கொடுக்கலாம்.

 

தக்கவைக்கப்பட்ட சி.எஸ்.கே. அணி வீரர்கள்:

கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், பிராவோ, கரன் ஷர்மா, ஷேன் வாட்சன், ஷர்டுல் தாகூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூ பிளெசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கிணினி நிக்டி, கே.எம்.ஆசிஃப், என்.ஜகதீசன், மோனு சிங், துருவ் ஷோரி, சைய்தேன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி, மிட்செல் சாண்ட்னர்.

 

 

 

Next Story

சேப்பாக்கத்தில் செழுமையான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl score CSK vs gt ipl latest live score update chennai wins

ஐபிஎல் 2024 7 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் விரைவிலேயே நடையைக் கட்டினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான சஹாவும் 21 பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் இறங்கிய சாய் சுதர்சன் கடந்த ஆட்டத்தைப் போலவே இம்முறையும் பொறுப்பாக ஆடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்த மில்லர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

ஆனால், அவரின் அதிரடி வெகு நேரம் நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஒமர்சாயுடன் இணைந்த சுதர்சன் நிதானமாகவே ஆடி வந்தார். ஆனாலும் தவறான ஷாட்டால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒமர்சாயும் 11 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

CSK vs GT: சேப்பாக்கத்தை சிலிர்க்க வைத்த சிவம் துபே!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl live score update csk vs gt shivam dube show

ஐபிஎல் 2024 ஏழாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 3.1 ஓவர்களில் 29-1 என்று ஆடி வருகிறது.