Skip to main content

மின்னல்வேக ஸ்டம்பிங், கள வியூகம், பினிஷர், அதிரடியான பவுலிங் மாற்றம்... ஒரே பெயர் தோனி

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் கிடைக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்திய அணிக்கு உலகின் சிறந்த விக்கெட் கீப்பர், பெஸ்ட் பினிஷர், சிறந்த கேப்டன், பல கிரிக்கெட் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியவர் என பல அவதாரங்களுடன் கூடிய தோனி என்னும் அபூர்வங்களின் நாயகன் கிடைத்தார். இவர் ஒரு கிரிக்கெட்டர் என்பதையும் தாண்டி ரசிகர்களையும், மக்களையும் கவர்ந்து விட்டார்.  

 

csk

 

ஐ.பி.எல். தொடர் பல விசித்திரங்களை கொண்டது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் எந்த நாட்டில் விளையாடினாலும், அங்கு இந்திய அணிக்கு அதிக ஆதரவு இருக்கும். ஆனால் ஐ.பி.எல்.லில் இந்திய வீரர்கள் அவுட் ஆகும்போதும், இந்திய வீரர்களின் பவுலிங்கில் பவுண்டரிகள் விளாசப்படும்போதும் ரசிகர்களின் கோஷங்கள் மைதானங்களை ஆக்கிரமிக்கும். 
 

இப்படிப்பட்ட தன்மை கொண்ட ஐ.பி.எல்.லில் சென்னை அணிக்கு விளையாடும் தோனி மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் ஆடும்போதும், பெங்களுரு அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆடும்போதும் “தோனி தோனி தோனி” என மும்பை ரசிகர்களும், பெங்களுரு ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தை ரசித்தது உண்டு. இது போன்ற சம்பவங்கள் சச்சின், விராட் கோலி, தோனி போன்ற சில வீரர்களுக்கு மட்டுமே நிகழும். 
 

சர்வதேச அணிக்கு கேப்டன்களாக இருந்த டூ பிளசிஸ், பிராவோ, ஜார்ஜ் பெய்லி, பிளமிங், ஸ்மித், ஹோல்டர், கோலி, ஷர்மா, ரஹானே, ரெய்னா உள்ளிட்ட பல வீரர்களுக்கு கேப்டன்களாக இருந்த பெருமைக்குரியவர். ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சென்னை அணிக்கு விளையாடியபோது தோனியிடம் கற்றுக் கொண்டேன். அது சர்வதேச போட்டிகளில் நான் கேப்டனாக இருக்கும்போது மிகவும் உதவுகிறது என்றார் பிராவோ.  

 

csk

 

கள வியூகங்களை வகுப்பதில் இவர் வல்லவர். எந்த பீல்டரை எங்கு நிறுத்த வேண்டும், எந்த பவுலரை எப்போது பவுலிங் செய்ய அழைக்க வேண்டும், எந்த பேட்ஸ்மேனை எந்த விக்கெட்டுக்கு களமிறக்க வேண்டும் என்று துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார். 
 

2010-ஆம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்ட் மும்பை அணிக்கு பேட் செய்து கொண்டிருந்தார். 12 பந்துகளுக்கு 33 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி கொண்டிருந்தார் பொல்லார்ட். அப்போது அம்பயர்க்கு பின்னால் மிட்-ஆப் இடத்தில் ஒரு பீல்டரை நிறுத்தினார் தோனி. இது வித்தியாசமான ஒரு பீல்டிங் செட்டப்பாக இருந்தது. பொல்லார்ட் அடித்த பந்து அந்த பீல்டரிடம் கேட்ச் ஆனது. சென்னை அணி அந்தப் போட்டியில் வென்று முதல் கோப்பையை கைப்பற்றியது. 2017 ஐ.பி.எல். இறுதிப் போட்டியிலும் புனே அணிக்கு விளையாடிய தோனி இதே மாஸ்டர் பிளான் மூலம் பொல்லார்ட்டை அவுட் ஆக்கினார். 

 

csk

 

அந்த கேப்டன்ஷிப் இன்னும் வேறு எந்த வீரரிடமும் கண்டதில்லை. அதற்கு பிறகு சென்னை அணிக்கு எதிராக பொல்லார்ட் விளையாடிய போட்டிகளிலும் அதே மாதிரி பீல்டிங் மூலம் சில முறை விக்கெட் எடுத்துள்ளார் தோனி. பீல்டிங் வியூகங்களை எவ்வாறு அமைக்க வேண்டும்? என்பது குறித்து தோனி ஓய்வு பெற்றவுடன் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டார்.
 

ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக 3725 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த கேப்டன் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை கேப்டனாக 94 போட்டிகளில் வெற்றி பெற்றுத்தந்துள்ளார். இன்னும் 6 போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் முதல் ஐ.பி.எல். கேப்டன் 100 வெற்றியை பெற்றுத்தந்தார் என்ற சாதனையை படைக்க காத்திருக்கிறார் தோனி. 
 

கடந்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் பெங்களுரு மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் பைசில் பவுண்டரி லைனுக்கு சென்ற பந்தை விக்கெட் கீப்பரான தோனி 6.12 வினாடிகளில் 28 மீ கடந்து பவுண்டரிக்கு செல்லாமல் 2 ரன்களில் தடுத்தார். விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு கீப்பிங் கிட்டுடன் அவ்வளவு தூரம் ஓடுவது அரிதான ஒன்று. இதுபோன்று ஒரு வீரராகவும் சிறப்பாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக உள்ளார் தோனி. 

 

csk

 

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியில் விளையாடி வந்த ராயுடு கடந்த ஆண்டு சென்னை அணிக்கு விளையாடினார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியதில் தோனி முக்கியமானவர். எனக்கு தேவையான சுதந்திரத்தை தோனி அளித்தார். அது என் நம்பிக்கையை அதிகரித்தது என்று ராயுடு கூறினார். 
 

ஒரு வீரருக்கு தேவையான நம்பிக்கையை அளிப்பதில் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறார் தோனி. ஒரு வீரருக்கு எது சரியாக இருக்கும் என்பதை சரியாக கணித்து, அதற்கு ஏற்றார்போல அந்த வீரரை தயார் செய்து, அந்த வீரருக்கு நம்பிக்கையை அளித்து வருகிறார். 
 

யாரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கேப்டனின் ரோல் அதிகம். வீரர்களை கையாளுவதில் தேர்ந்தவர். பல சர்வதேச கேப்டன்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக காட்சியளிக்கிறார் தோனி. இன்னும் எத்தனை கேப்டன்கள் வந்தாலும் இவர் எப்பவும் மக்களின், ரசிகர்களின் கேப்டன். இவர் மிகவும் அரிதிலும் அரிதாகவே கிடைக்கும் விளையாட்டு வீரர். 
 

சென்னை அணி விளையாடிய 9 சீசன்களிலும் வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இல்லை. ஆனால் இருக்கும் பவுலர்களை கொண்டு அனைத்து சீசன்களிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றது தோனியின் கேப்டன்சியை உலகுக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு வருடமும் மின்னல்வேக ஸ்டம்பிங், கள வியூகம், பினிஷர், அதிரடியான பவுலிங் மாற்றம் என ஐ.பி.எல். தொடரில் தனி முத்திரை பதித்து வரும் தல தோனி, இந்த வருடமும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Next Story

சேப்பாக்கத்தில் செழுமையான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl score CSK vs gt ipl latest live score update chennai wins

ஐபிஎல் 2024 7 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் விரைவிலேயே நடையைக் கட்டினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான சஹாவும் 21 பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் இறங்கிய சாய் சுதர்சன் கடந்த ஆட்டத்தைப் போலவே இம்முறையும் பொறுப்பாக ஆடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்த மில்லர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

ஆனால், அவரின் அதிரடி வெகு நேரம் நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஒமர்சாயுடன் இணைந்த சுதர்சன் நிதானமாகவே ஆடி வந்தார். ஆனாலும் தவறான ஷாட்டால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒமர்சாயும் 11 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

CSK vs GT: சேப்பாக்கத்தை சிலிர்க்க வைத்த சிவம் துபே!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl live score update csk vs gt shivam dube show

ஐபிஎல் 2024 ஏழாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 3.1 ஓவர்களில் 29-1 என்று ஆடி வருகிறது.