Advertisment

காயமடைந்த பிராவோ மீண்டும் அணியில் இடம்பிடிப்பாரா? பயிற்சியாளர் விளக்கம்!

csk coach

Advertisment

காயமடைந்த பிராவோ மீண்டும் அணியில் இடம் பிடிப்பாரா என்ற கேள்விக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது நாளான இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வென்று, உற்சாகத்தில் உள்ள சென்னை அணி அடுத்த வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு முதல் போட்டி என்பதால், அவ்வணியும் இத்தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் சம பலங்கொண்டு மோதுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த போட்டியில் காயத்தின் காரணமாக அணியில் இடம் பெறாதசென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ, மீண்டும் அணியில் இடம் பிடிப்பாரா, இன்றைய போட்டியில் ஆடும் அணியில் இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், பிராவோ நலமாக உள்ளார். அவரைப் பூரண குணமடையச் செய்ய முழுமையாகக் கவனித்து வருகிறோம். குறுகிய காலத்தில் மூன்று போட்டிகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. அவர் காயத்தின் தன்மையைப் பொறுத்து அடுத்தடுத்த போட்டிகளில் முடிவெடுக்கப்படும். பிராவோ இல்லாத நெருக்கடியை சாம் கரண் குறைத்திருக்கிறார். இருந்தாலும் பிராவோ மாதிரியான சிறந்த வீரர்ஆடும் அணியில் இடம் பெற வேண்டியது முக்கியம்" என்றார்.

CSK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe