csk ceo kasi viswanathan confirmed dhoni played first match in this series ipl

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று தொடங்க உள்ளநிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும்இன்று நடைபெறும் போட்டியில்தோனி விளையாடுவது சந்தேகம் எனத்தகவல்கள் பரவின.

Advertisment

இன்று தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே சார்பில் களமிறங்கும் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதுஇடது காலின் மூட்டுப் பகுதியில் வலி இருந்ததாவும் அதனால் இன்று நடைபெறும் போட்டியில் தோனிவிளையாடுவது சந்தேகம் எனத்தகவல் வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.

Advertisment

இந்த தகவல்கள் பரவிய சில மணி நேரத்தில்குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி நிச்சயம் களம் காண்பார் என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன்காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.