josh hazlewood

உலகம் முழுவதும் பிரபலமான ஐ.பி.எல் தொடர், வரும் ஏப்ரல் 9ஆம்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனையடுத்துவீரர்கள், தங்கள் அணியோடுஇணைந்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் அணிகள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட், ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அணி, அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதைக் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Advertisment

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி, முதல் போட்டியில் ஆடமாட்டார்என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு முக்கிய வேகப்பந்து வீச்சளார்அணியிலிருந்து விலகியுள்ளதுசி.எஸ்.கே அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.