ரொனால்டோவிற்கு கரோனா உறுதி!

Cristiano Ronaldo

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணியின் கேப்டனாக ரொனால்டோ இருந்து வருகிறார். இவர் தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் தேசிய லீக் தொடரில் விளையாடிவருகிறார். அங்கு நடந்த கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை போர்ச்சுக்கீசிய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. போர்ச்சுக்கல் அணி, அடுத்த போட்டியில் சுவீடன் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இருந்து விலகியுள்ள ரொனால்டோ, தன்னை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

Christiano Ronaldo corona virus
இதையும் படியுங்கள்
Subscribe