உத்தரகாண்ட் மாநிலத்தில்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது உடல்நிலைதேறிவரும் நிலையில்வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் ரிஷப்பண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் மாடிப்படிக்கட்டில் ஏறும்போது கடும்சிரமத்திற்குஇடையில் படிக்கட்டின்கைப்பிடி உதவியுடன்ரிஷப் பண்ட் நடந்துவருகிறார். அதனைத்தொடர்ந்து தற்போது சற்று சகஜமாக நடந்து வருகிறார். அந்த வீடியோவில், 'மோசமாக இல்லை. சாதாரணவிஷயங்கள் கூட சில நேரங்களில் கடினமாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்துஅவரது ரசிகர்கள் ரிஷப் முழுவதும்குணமடையவும், விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு வாருங்கள் எனவும்கமெண்ட் செய்து உற்சாகம் அளித்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள்மத்தியில் மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தவீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.