Skip to main content

நடிகையை கரம்பிடித்த மனிஷ் பாண்டே!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடக அணியின் முக்கிய வீரராகவும், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருபவர் மனிஷ் பாண்டே. இந்திய கிரிக்கெட்  அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இவருக்கும், பிரபல தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டிக்கும் இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?❤ @manishpandeyinsta @ashritashetty_

A post shared by Manish pandey FC?? Ⓜ️?️ (@manish_addicted9insta) on


நேற்று நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டியில், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி, தமிழக அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தநிலையில் இன்று தன்னுடைய நீண்டகால காதலியும், நடிகையுமான அஷ்ரிதா ஷெட்டியை மனிஷ் பாண்டே கரம்பிடித்தார். அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் என்ஹச்-4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
 

 

Next Story

முன்தினம் கிரிக்கெட்.. மறுநாள் திருமணம்... தமிழ் நடிகையை மணந்த இந்திய கிரிக்கெட் வீரர்...

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

30 வயதான இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டே, தமிழ் திரைப்பட நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

 

manish pandey ties knot with tamil actress ashrita shetty

 

 

பெங்களூருவை சேர்ந்த மனிஷ் பாண்டே இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவரும், உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்த அஷ்ரிதா ஷெட்டியும், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இவர்களது திருமண அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அறிவித்தபடி அவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது.

அதற்கு முந்தைய நாள் இரவு தமிழகத்துக்கு எதிரான முஷ்டாக் அலி கோப்பையில் கர்நாடக அணியின் கேப்டனாக விளையாடிய மனிஷ் பாண்டே அந்த ஆட்டத்தில் தனது அணியை வெற்றி பெறவும் வைத்தார். பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் நாள் இரவு சாம்பியன் பட்டம், மறுநாள் காலை திருமணம் என ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார் மனிஷ் பாண்டே.  

 

 

Next Story

பிரபல தமிழ் திரைப்பட நாயகியை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே..?

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மனிஷ் பாண்டே விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

manish pandey to tie knot with actress ashrita shetty

 

 

30 வயதான இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டே பெங்களூருவை சேர்ந்தவர். இவர், இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்த ஹர்ஷிதா ஷெட்டியும், இவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.