மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான பிராவோ நேற்று முன்தினம் திடீர் விசிட்டாக தமிழகம் வந்தார்.

Advertisment

cricketer bravo meets real life padman arunachalam muruganandham

இதனையடுத்து நேற்று கோவையில் வசிக்கும் பத்ம விருது பெற்ற அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்தார். குறைந்தவிலை நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரத்தைதயாரித்து, அதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்களை பயன்பெற செய்தவர் இந்த அருணாசலம் முருகானந்தம். இவரது இந்த சேவையை பாராட்டி கடந்த ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

இந்த சந்திப்பில் முருகானந்தத்திடம் குறைந்த விலை நாப்கின் திட்டத்தை, பிராவோ தனது சொந்த நாட்டில் செயல்படுத்துவது குறித்து பேசியதாகவும், இதனையடுத்து இந்த திட்டத்திற்கு அருணாசலம் முருகானந்தம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

சிஎஸ்கே அணியில் விளையாடி தமிழக ரசிகர்களின் ஃபேவரைட் வீரராக வலம் வரும் ப்ராவோவின் இந்த சமூக அக்கறையை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேநேரம் பெண்கள் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றையும் பிராவோ எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.