Advertisment

Pak vs NZ : ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Cricket World Cup; pakistan vs new zealand score update

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் போதுமழை வந்ததால் ஆட்டம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisment

உலகக் கோப்பையின் 35 ஆவது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.

Advertisment

இதில் அதிகபட்சமாக ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 108 ரன்களை குவித்தார். அதே போல், வில்லயம்சன் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 95 ரன்களை எடுத்து அவுட்டானார். இதில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது வாசிம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது.

அதனை தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபஹர் ஷமான் 69 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 106 ரன்களுடனும், பாபர் அசாம் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 47 ரன்களுடனும் ஆடியநிலையில், 21.3 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மழை நின்றதால் 6.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

rain WorldCup
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe