உலகக் கோப்பை கிரிக்கெட்; 199 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா

Cricket World Cup; Australia bowled out for 199 runs

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை போட்டியின் 5 வது லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி199 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 200 ரன்களை ஆஸ்திரேலியா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்துள்ளனர். ஜடேஜா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, சிராஜ் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.

அதேசமயம் இதுவரை நடந்துள்ள 5 லீக் போட்டிகளில் இதுதான் குறைந்த அளவில் அடிக்கப்பட்ட ஸ்கோர் இதுவாகும். இந்த போட்டியின்போது இங்கிலாந்தைச் சேர்ந்த யூடியூபரான ஜார்வோ, ஆடுகளத்தில் நுழைந்து இடையூறு செய்தார். மேலும் இவர் தொடர்ச்சியாக இவ்வாறு மைதானத்திற்குள் நுழைந்து இடையூறு செய்வதை வாடிக்கையாகக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Australia cricket India
இதையும் படியுங்கள்
Subscribe