ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Cricket in the Olympics Official notification released

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ்பால் - சாஃப்ட்பால், பிளாக் புட்பால் உள்ளிட்ட 5 போட்டிகளைச் சேர்த்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து இருந்தது. அதே சமயம் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டும், ரஷ்ய வீரர்கள் விருப்பப்பட்டால் ரஷ்ய நாட்டின் கொடியில்லாமல் தனிப்பட்ட முறையில் வீரர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ் பால் - சாஃப்ட் பால், லார்க்ரோஸ் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு ஒலிம்பிக் விளையாட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டதற்கான அடையாளமாக விராட் கோலியின் புகைப்படத்தை சேர்த்துவெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

America cricket olympics
இதையும் படியுங்கள்
Subscribe