Advertisment

கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்!

Cricket legend Shane Warne passes away

Advertisment

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) தாய்லாந்தில் இருந்த போது இன்று (04/03/2022) ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக 1992- ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் (708) வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்குரியவர் வார்னே. தனது மாயாஜால பந்துவீச்சால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்னே.

ஷேன் வார்னே மறைவுக்குஉலகம் முழுவதும் உள்ளகிரிக்கெட் அணியின் வீரர்கள், அவரது ரசிகர்கள்ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

Australia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe