நிறவெறி தாக்குதல் நடந்தது உண்மைதான்! - உறுதிசெய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்..

scg

சமீபத்தில் நடந்து முடிந்தஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்தொடரின்போது, இனவெறி சர்ச்சைஎழுந்ததது. இரு அணிகளும்மோதியமூன்றாவது டெஸ்ட்போட்டியில்ஆஸ்திரேலிய பார்வையாளர்கள் சிலர், இந்திய வீரர்கள்பும்ராவையும், சிராஜையும் இனரீதியிலான சொற்களால் தாக்கினர்.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட்வாரியம், இதுதொடர்பாகசர்வதேச கிரிக்கெட்வாரியத்திடம் புகாரளித்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும்இதுதொடர்பாகவிசாரணையில் இறங்கியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியம், இந்தியவீரர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்தது உண்மைதான் என சர்வதேச கிரிக்கெட்வாரியத்திடம் உறுதிசெய்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியம், ‘இந்த விவகாரத்தில்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணைதொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைடிக்கெட்விவரங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை கொண்டு கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீண்டகால தடை விதிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியம் தெரிவித்துள்ளது.

ind vs aus racism
இதையும் படியுங்கள்
Subscribe