Advertisment

கரோனாவால் தயங்கும் இந்திய அணி? - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

brisbane

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட்போட்டிகள்முடிவடைந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியிலும், நான்காவதுடெஸ்ட்போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், நான்காவதுபோட்டி நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில், கரோனாபரவல் அதிகரித்துவருகிறது. அதனைத் தொடர்ந்து அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்திய அணி வீரர்கள், பிரிஸ்பேன் சென்றால், தங்கியுள்ள ஹோட்டலில்இருந்து மைதானத்திற்கு மட்டுமே செல்லமுடியும். மற்றபடி எதற்காகவும், தாங்கள் தங்கியுள்ள தளத்திலிருந்து வெளியேற முடியாதுஎன்ற நிலை ஏற்படும் எனவும், அதனால்இந்திய வீரர்கள்பிரிஸ்பேன் செல்வதற்குதயக்கம் காட்டிவருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி, "இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் தினமும் பேசி வருகிறேன்.இந்திய கிரிக்கெட் வாரியத்தினர் எங்களுக்கு ஆதரவாகஉள்ளார்கள் என்பதைத் தவிர வேறு எதையும்கூறும் வகையில், அவர்களிடமிருந்து முறைப்படியான எந்தத் தகவலும் வரவில்லை. மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், எவ்வளவு கடுமையானவை எனஇனிதான்தெரியவரும்" எனத் தெரிவித்துள்ளார்.

indian cricket indvsaus
இதையும் படியுங்கள்
Subscribe