பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி?

கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளது.

Corona virus issue - IPL cricket match without Visitors

இந்த வைரஸ் பரவி வருவதை தடுக்க இந்தியாவில் சில மாநிலங்களில் பள்ளி, கல்லூகள், திரையரங்கு போன்றவை மூடப்பட்டுள்ளன. மக்களும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடத்தினால், இந்த போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மூலம் கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துமாறு ஐபில் நிர்வாகக்குழுவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது அறிவுறுத்தியுள்ளது.

corona virus IPL match
இதையும் படியுங்கள்
Subscribe