Skip to main content

தடுப்பூசி செலுத்திக்கொண்ட குல்தீப்; வெடித்த சர்ச்சை - விசாரணைக்கு மாஜிஸ்ட்ரேட் உத்தரவு!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

kuldeep yadav vaccination

 

இந்தியாவில் கரோனா அலையைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே ஒன்றாம் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், அதனைத்தொடர்ந்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுவருகின்றனர்.

 

அந்தவகையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அண்மையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மேலும், தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட அவர், அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்தநிலையில், குல்தீப் யாதவ் தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. ஜாகேஷ்வர் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் பதிவு செய்ததாகவும், ஆனால் மருத்துவமனைக்கு வராமல் கெஸ்ட் ஹவுஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுக்கு கான்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

"ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்" - ரஜினியின் புகழ்பாடிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

kuldeep yadav meets rajinikanth

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. மூன்றாவது போட்டி வருகிற 22ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இதனிடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று கண்டு ரசித்தார். இந்த நிலையில் ரஜினியை சந்தித்து பேசியதாக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் நேற்று நடந்த போட்டியில் 8 ஓவர்களை வீசி 48 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தனது 170வது படத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 


 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.