Advertisment

நடப்பு ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்கள்; பட்டியல் வெளியீடு

Commentators of the current IPL series; Publication of list

ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் மார்ச் 31 இல் துவங்கி மே 21 ஆம் தேதி வரை நடக்கிறது. போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கப்பட்டு, அவைசில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

Advertisment

ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும், மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமானநிகழ்வுகள் தொடர்கின்றன.

Advertisment

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரை ஓடிடி தளத்தில் ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பங்குபெறப் போவோர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆங்கில வர்ணனையாளர்களாககிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், இயான் மோர்கன், பிரட் லீ, கிரேம் ஸ்வான், கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சனா கணேசன், சுப்ரியா சிங், சுஹைல் சந்தோக் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

ஹிந்தியில்ஓவைஸ் ஷா, ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா, அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, சபா கரீம், அனந்த் தியாகி, ரிதிமா பதக், சுர்பி வைத், க்ளென் சுல்தானா ஆகியோர் வர்ணனையாளர்களாகசெயல்பட உள்ளனர்.

தமிழில்அபினவ் முகுந்த், ஆர்.ஸ்ரீதர், வித்யுத் சிவராமகிருஷ்ணன், பாபா அப்ரஜித், பாபா இந்திரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், கே.பி.அருண் கார்த்திக், சுதிர் சீனிவாசன், பகவதி பிரசாத், சஞ்சய் பால், ஸ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன், சமீனா அன்வர், காயத்ரி சுரேஷ் ஆகியோர் வர்ணனையாளர்களாகசெயல்பட உள்ளனர். அதேபோல் பிற மொழி வர்ணனையாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe