Advertisment

ரொனால்டோவுக்கு வெறும் 20 வயசுதான்! - வியக்கும் ஜூவெண்டஸ் மருத்துவக் குழு

ronaldo

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஒயின் நாளாக நாளாக அதன் சுவை பலமடங்கு அதிகரிக்கும் என்பது உலகறிந்த தகவல். இது யாருக்கு பொருந்துமோ ரொனால்டோவுக்கு நிச்சயமாக பொருந்தும். ஆம்.. நாளுக்கு நாள் அவரது வயதுக்கு ஏற்றாற்போல், உடற்கட்டு இளமையாகிக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மேட்ரிட் அணியில் இருந்து விலகி, ஜூவெண்டஸ் அணிக்கு ரூ.900 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்துகொண்டார். தற்போது அவரது உடல்நிலையைப் பரிசோதித்துப் பார்த்த அந்த அணியின் மருத்துவக்குழு, ரொனோல்டோவின் உடல்கட்டு 20 வயது இளைஞனுக்கு ஒப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதற்கு முன்பு ஒருமுறை ரொனால்டோவின் உடல்கட்டு 23 வயதுக்கு ஒப்பாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. தற்போது நாட்கள் கடந்து 3 வயது குறைந்திருப்பதாக புதிய தகவல் தெரிவிக்கிறது. அவரது உடலில் வெறும் 7% மட்டுமே கொழுப்பு உள்ளது; சராசரியாக ஒரு கால்பந்தாட்ட வீரருக்கு 10% இருக்கலாம். தசைகளின் எடை 50%; சராசரியை விர்ட 4% அதிகம். உலகக்கோப்பையில் அதிவேகமாக ஓடிய ரொனோல்டோவின் அதிகபட்ச வேகம் 33.88கி.மீ. என வியந்தபடி அறிக்கையை வெளியிட்டிருக்கிறது ஜூவெண்டஸ் மருத்துவக் குழு.

Christiano Ronaldo sports Indian football football
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe