களமிறங்குகிறார் கெயில்!

Chris Gayle

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த அதிரடி வீரரான கெயில், பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த கெயில், தற்போது முழுவதும் குணமடைந்துவிட்டார் என பஞ்சாப் அணி நிர்வாகம் சில தினங்களுக்கு முன்னாள் தெரிவித்தது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு இச்செய்தி சற்று ஆறுதலாக அமைந்தது.

கெயில் ஆடும் அணியில் இடம்பிடிப்பது எப்போது, அடுத்த போட்டியில் களமிறங்குவாரா என அவ்வணி ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில், பஞ்சாப் அணி நிர்வாகம் கெயில் அடுத்த போட்டியில் ஆடும் அணியில் இடம்பிடிப்பார் என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

7 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 6 தோல்விகள் பெற்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, பெங்களூரு அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது.

chris gayle IPL
இதையும் படியுங்கள்
Subscribe