Chris Gayle

ஒரே ஓவரில் அதிக முறை 25 ரன்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் கெயில் முதலிடத்தில் தொடர்கிறார்.

Advertisment

13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 38 -ஆவது லீக் போட்டி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கெயில், 13 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Advertisment

பஞ்சாப் அணியின் இன்னிங்ஸிற்கு எதிரான 5 -ஆவது ஓவரை டெல்லி அணி வீரர் தேஷ்பாண்டே வீசினார். அந்த ஓவரில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 25 ரன்களைகெயில் அடித்தார். ஒய்டாக வீசிய ஒரு பந்தையும் சேர்த்து மொத்தம் 26 ரன்களை தேஷ்பாண்டே வாரி வழங்கினார். இதன்மூலம், ஒரே ஓவரில் அதிக முறை 25 ரன்கள் விளாசிய வீரர்கள் என்ற பட்டியலில் கெயில் முதலிடத்தில் தொடர்கிறார்.

இதுவரை கெயில் மொத்தமாக 7 முறை 25 ரன்கள் விளாசியுள்ளார். ரோகித் ஷர்மா, பொல்லார்ட், ஜோஸ் பட்லர், வாட்சன் ஆகியோர் தலா இரண்டு முறை அடித்து, இரண்டாவது இடத்தில் உள்ளனர்.