தென் ஆப்ரிக்காவில் மான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஜோசி ஸ்டார் அணியும் பார்ல் அணியும் 13 ஆவது போட்டியில் மோதின. இதில் ஜோசி ஸ்டார் அணியில் கிரிஸ் கெயிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் போட்டியின் முதல் ஓவரில் கிரிஸ் கெயில் வீசிய பந்து, பேட்ஸ்மேன் ஹென்ரி டேவிட்டின் தொடையில் பட அம்ப்பயரிடம் எல்பிடபில்யூ கேட்டார். ஆனால் அம்பயர் கொடுக்க மறுத்துவிட்டார். உடனே அம்ப்பயரிடம் அவுட் கொடுக்குமாறு குழந்தை போல அழுது அடம்பிடித்தார். இதனை கண்ட அம்ப்பயருக்கு சிரிப்பை அடக்கமுடியவில்ல. இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.