Chris Gayle

கிறிஸ் கெயில் முழுவதும் குணமடைந்துவிட்டார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அதன்பின், வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், கிறிஸ் கெயில் முழுவதும் குணமடைந்து தேறிவிட்டார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

பஞ்சாப் அணி, பெங்களூரு அணியை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், கிறிஸ் கெயில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.