Pujara

இந்திய கிரிக்கெட் வீரரானபுஜாரா சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய கிரிக்கெட் வீரரான புஜாரா கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் தேதி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 18 சதங்களுடன் 5,840 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நேற்று புஜாரா நிறைவு செய்தார். இதனையடுத்து, தன்னுடைய சமூக வலைதள பக்கம் வாயிலாக கடந்த 10 ஆண்டுகளில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய கிரிக்கெட் வீரராக 10 ஆண்டுகளை நிறைவு செய்தது பெருமையளிக்கிறது. இளமைக் காலங்களில் என் அப்பாவின் பார்வையில் ராஜ்கோட்டில் கிரிக்கெட் விளையாடியபோது, நான் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவேன் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. நீங்கள் அளித்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. அணிக்காக இன்னும் நிறைய பங்களிப்பை அளிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.