செஸ் உலகக்கோப்பை ; கார்ல்சன் வெற்றி

Chess World Cup; Carlson wins

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது.

இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை - பிரேக்கர்ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3 ஆவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இந்த அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில் நேற்று முன்தினம் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதிய உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று 35 நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்துஇரண்டாம் சுற்று போட்டி நேற்று துவங்கிய நிலையில் இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று தற்பொழுது செஸ் டை பிரேக்கர் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய பிரக்ஞானந்தா முதல் சுற்றில் வீழ்ந்த நிலையில், இரண்டாம்சு ற்று டிராவில் முடிந்தது. இதனால்நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe