Advertisment

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ரன் குவிப்பு!

hj

Advertisment

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன் குவித்துள்ளது.

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-ஆவது ஐ.பி.எல் தொடர் கடந்த 19-ஆம் தேதி அமீரகத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. ஐ.பி.எல் நடைபெறுமா என்பது குறித்து பெருத்த சந்தேகம் நீடித்து வந்த நிலையில், ஐ.பி.எல் தொடர் அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேலும் தோனியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு, தோனி தற்போது களம் கண்டுள்ளார்.

முதல் போட்டியில் சென்னை வெற்றி பெற்ற நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இரண்டாவது போட்டியில் மோதியது. தற்போது டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாம்சன் அரை சதம் அடித்தார். அவர் 74 ரன்கள் எடுத்து எடுத்தார். பின்னர் வந்த வீரர்களும் அதிரடி காட்டியதால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாட தொடங்கிய சென்னை அணி 6.3 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.

IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe