Advertisment

மஞ்சள் மச்சான்ஸ்க்கு சென்னை வெயிட்டிங்!  CSK வீரர்கள், ஒரு பார்வை       

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களின் உள்ளூர் மற்றும் சர்வதேசபோட்டிகளை முடித்துவிட்டு ஐபில் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவா ஒரு விளையாட்டுனா அடுத்து நடக்கப்போற தொடருக்கு விளையாட்டு சார்ந்த பயிற்சியை தான் ஆரம்பிப்பாங்க.ஆனாஐபிஎல்-ல மட்டும் தாங்க, டான்ஸ், பாட்டு, சந்தோசம், கண்ணீர்னு ஒரு மசாலாபடம் பாக்குற அனுபவத்திற்கு, மேட்ச் ஆடுறஅவங்களும் பாக்குற நம்மளும்தயாராவோம்.

Advertisment

CSK team arrival

அவரவர்அணியோடு இணையுறது, அப்புறம் அந்த சூழலுக்கு மாறுவது, அந்தஅணியின் விளம்பரத்துக்கு போடாத வேஷம்லாம் போடுறது, பாட்டு பாடுறது,டான்ஸ் ஆடுறதுனு எல்லா டீமும் தங்கள் வேலையை ஆரம்பிச்சாச்சு.நம்ம சென்னை அணி தன்னோட 2018ஆம் ஆண்டு ஐபிஎல்க்கு தயாராவதற்காகஒன்னு கூடஆரம்பிச்சுட்டாங்க. வரவேற்பு, கொஞ்சம் வலைப்பயிற்சின்னு ஆரம்பிச்சு இப்போவிளம்பரம், ஆட்டம், பாட்டம்னு தன்ஆட்டத்தை ஆரம்பிச்சுடுச்சு நம்மமஞ்சள் அணி.(விளையாட்டுக்கு இன்னும் நாள் இருக்கு).

csk team 2018

Advertisment

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நம்ம சென்னை அணி ரெண்டுவருஷ தடைக்குப்பிறகு கிரிக்கெட் விருந்து வைக்க தயாராகிட்டு இருக்கு.கேப்டன் கூல் தல தோனி, சின்ன தல ரெய்னா, சர் ரவீந்திர ஜடேஜா எல்லாம்சிஎஸ்கேவின் அடையாளமாக இருக்காங்க. அவங்க திரும்பி வந்ததுல ரசிகர்கள்குஷியா இருக்காங்க. இவங்களுக்கு அடுத்து டுவெய்ன்பிராவோ சென்னை அணியின் எண்டர்டெயினர். இவர் மைதானத்துல போடுற ஆட்டமும்மைதானத்துக்கு வெளில போடுற ஆட்டமும் செம்ம பேமஸ். 'நீலவானம் நீலவானம்'னு 'உலா' தமிழ்படத்துல வர்ற ஒரு பாட்டுல இவரு பாடி ஆட்டம்போட்டது ஒரு ரகம்னா, ஒருவிக்கெட் எடுத்துட்டு இவர் போடுற ஆட்டம் இன்னொருரகம். இவருக்குத்துணையா இப்போநம்ம ஹர்பஜன் சிங்கும் வந்து இணைஞ்சிருக்கார். 'ஏக் சுநேஹா'னுதேசபக்தியோட விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் நினைவாக ஒரு பாட்டு பாடிவிட்டு, தமிழ்ல தலைவர் வசனத்தோட 'வந்துட்டேன்னு சொல்லு'னுட்வீட் போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டாரு.

bravo dance

மண்ணின் மைந்தர் முரளிவிஜய் டெஸ்ட் போட்டி போல T20 லயும் கலக்குறதுக்கு ஆவலோடு இருக்குறார்.பேட்டிங்ல மட்டும் இல்லை ஷூட்டிங்லயும்தான். இன்னும் தென்னாபிரிக்கஆளுங்களத்தான் காணோம். ஆஸ்திரேலியா கூட டெஸ்ட் மேட்ச் ரணகளமா முடிச்சுட்டு வர்றாங்கடூப்ளஸிஸ்மற்றும் லுங்கி நிகிடி.ஒரு விக்கெட் எடுத்தால் ஒன்றைகிலோமீட்டர் ஓடுற இம்ரான் தாஹிர் டான்ஸ் ஆடுறாரோ இல்லையோ நல்லா ஓடுவாரு.இந்திய அணியில் அப்பப்போ வாய்ப்பு கிடைச்ச வீரர்கள் கேதார், அம்பத்தி ராயிடு, கரண் சர்மா, ஷரதுல் மற்றும் வாய்ப்புக் கிடைக்கக்காத்திருக்கும் இன்னொரு மண்ணின் மைந்தர் நம்ம கோயம்புத்தூர் தம்பிநாராயணன், டோனி ஊர்க்காரர் மொனு குமார்லாம் இருக்காங்க.

dhoni fan saravanan

அணியின் உள்ளேவிளையாட யார் யார்க்கு வாய்ப்புகள் கிடைக்கும்ன்னு தெரியல. ஆனா, கொண்டாட எல்லாருக்கும்வாய்ப்பு இருக்கு. நமக்கு? நாம தான் என்னனாலும்பார்த்துட்டே இருப்போமே. ஏற்கனவே சிஎஸ்கேகாக தீம் பாடல், வீடியோ, மீம்ஸ்எல்லாம் போட்டு யூ-ட்யூப், ஃபேஸ்புக் எல்லாம்கலக்க ஆரம்பிச்சுட்டாங்க நமது மக்கள். இன்னொரு பக்கம், மஞ்சள் டீ-ஷர்ட், மஞ்சள் ஷூ, மஞ்சள் பெல்ட்னு வகை தொகையில்லாமல் மஞ்சளை வாங்கி ரெடியாகிக்கிட்ருக்காங்கரசிகர்கள். இன்னும் ஒரு வாரத்துல எல்லோரும் மஞ்சள் லைட்டை போட்டுட்டு கூட்டம் கூட்டமா கெளம்பிருவாங்க போல.

என்னதான் வயசான டீம்னு சொன்னாலும் அதே அழகு அதே ஸ்டைல்னு கெத்தா ஆடுவாங்கநம்ம பசங்க (அட சின்ன பசங்களும் இருக்காங்கப்பா டீம்ல). பொறுத்திருந்துபார்ப்போம்... நமக்கு தலைவாழை விருந்தா இல்லை டீயும் பன்னுமானு. மொத்தத்தில் மஞ்சள் மச்சான்கள் களத்தில் கலக்குவதை காணக் காத்திருக்கிறது ரசிகர் பட்டாளம்.

South Africa MS Dhoni IPL CSK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe