Chennai team loses ... Captain Dhoni fined!

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்,நேற்று (10/04/2021) நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களைச் சேர்த்தது. பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 85 ரன்களும், ப்ரித்திவ் ஷா 72 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களை எடுத்தார்.இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மெதுவாக பந்து வீசியதாக கேப்டன் தோனிக்கு, ஐபிஎல் நிர்வாகம் சார்பில் 12 லட்சம்ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.