
நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் அதிக கேட்சுகளைத் தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்களாக இருந்த ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் பலரும் அடுத்தடுத்து கேட்ச்களைத் தவறவிட்டனர். இதன் எதிரொலியாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் மூன்று கேட்ச்களைத் தவறவிட்டன. அந்த வகையில், நடப்பு ஆண்டு போட்டிகளில் இதுவரை 19 கேட்ச்களைத் தவறவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது. அடுத்ததாக டெல்லி மற்றும் குஜராத் அணிகள் தலா 15 கேட்ச்களைத் தவறவிட்டுள்ளனர்.