Advertisment

"சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌலிங் செய்யுற முதல் மூணு ஓவெர்ஸ்......"- ஹர்பஜன் சிங் சர்ப்ரைஸ்!

publive-image

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (09/04/2022) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி, பிற்பகல் 03.30 மணியளவில் மும்பையில் உள்ள டாக்டர் பட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில்(Dr DY Patil Sports Academy)நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அங்காளி.. பங்காளிகளா சௌக்கியமா. தமிழ் மக்க எல்லாருக்கும் வணக்கம். ரொம்ப நாள் ஆச்சு உங்க எல்லார்கூட பேசி. இன்னைக்கு நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மேட்ச்ல இரண்டாவது இன்னிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌலிங் செய்யுற முதல் மூணு ஓவெர்ஸ் நான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில தமிழ் கமாண்டெரி பண்ணுறேன் மறக்காம பாருங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe