ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகளான மும்பை இண்டியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் மோத இருக்கின்றன. இரண்டு அணிகளுமே பலம் கொண்டது என்பதால் ரசிகர்கள் இந்த போட்டிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Advertisment

chennai super kings squad for ipl final match against mumbai indians

இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில், வெற்றி பெரும் அணிக்கு 28 கோடி ரூபாய் பரிசும் காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை இவ்விரண்டு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளது. ஆனால் அந்த மூன்று போட்டிகளிலும்மும்பை அணியே வெற்றி பெற்றது.

Advertisment

இதனையடுத்து தொடர் தோல்விகளுக்கு இன்று சென்னை அணி பழிதீர்க்கும் என்று சென்னை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்காக சென்னை அணியில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த போட்டியில் ரன்களை வாரிவழங்கிய ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாகக் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்படுவார் எனவும், அது முரளி விஜய்யாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் நல்லஃபார்மில் இருக்கும் முரளி விஜய் இந்த ஆட்டத்தில் பங்கேற்றால் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment