/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/csk323_0.jpg)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (09/04/2022) இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதன்படி, முதல் போட்டி பிற்பகல் 03.30 மணியளவில் மும்பையில் உள்ள டாக்டர் பட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் (Dr DY Patil Sports Academy) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது.
அதைத் தொடர்ந்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததால், அதன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)