சென்னை - மும்பை போட்டி; கவனத்தை ஈர்த்த ஓபிஎஸ்ஸின் இருக்கை

chennai mumbai chepauk stadium kalaignar stand sit and watch ops

16வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் மோதுகின்றன.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைதேர்வு செய்தது.

இந்நிலையில் பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இப்போட்டியை, இரு அணிகளைச் சேர்ந்த ரசிகர்களும்தங்களது அணி வெற்றிபெறமைதானத்தில் ஆரவாரம் செய்து வருகின்றனர்.போட்டியைக்காணசேப்பாக்கம் மைதானத்திற்கு, தமிழக முன்னாள் முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ள நிலையில், அவர் இருக்கை அமைந்துள்ளஸ்டாண்டானது தமிழக முன்னாள் முதல்வர்கலைஞரின்நினைவாக சமீபத்தில் அவரது பெயர் சூட்டப்பட்ட ஸ்டாண்டில் அமைந்துள்ளது. அங்கு அமர்ந்தபடி ஓபிஎஸ் போட்டியை கண்டுகளித்து வருவதுபலரின்கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள்சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது.

VIRAL
இதையும் படியுங்கள்
Subscribe