Advertisment

முதல் இரண்டு இடத்தில் சென்னை சிங்கங்கள்; டெல்லியை வீழ்த்திய சிஎஸ்கே

Chennai Lions in the top two; CSK defeated Delhi

Advertisment

16 ஆவது ஐபிஎல் சீசனின் 55 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக துபே 25 ரன்களையும் ருதுராஜ் 24 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்களையும் அக்ஸர் 2 விக்கெட்களையும் குல்தீப், லலித்யாதவ், கலீல் அஹமட் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரூசோ 35 ரன்களையும் மனிஷ் பாண்டே 27 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியில் பதிரானா 3 விக்கெட்களையும் தீபக் சாஹர் 2 விக்கெட்களையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேவில் அதிக விக்கெட்களை இழந்த அணிகளின் பட்டியலில் டெல்லி அணி 25 விக்கெட்களை இழந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக 23 விக்கெட்களை இழந்து கொல்கத்தா அணியும் 21 விக்கெட்களுடன் பஞ்சாப் மூன்றாவது இடத்தில் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஜடேஜா மிடில் ஓவர்களில் 41 ஓவர்களை வீசி 16 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதில் 84 டாட் பந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது. டெத் ஓவர்களில் அதிக விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் பதிரானா 12 விக்கெட்களுடன் முதல் இடத்திலும் துஷார் தேஷ்பாண்டே 10 விக்கெட்களுடன் 2 ஆவது இடத்திலும் ஹர்ஷல் படேல் 9 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe