Advertisment

கண்கள் கலங்க விடைப்பெறுகிறேன் ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி!

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் சீசன்-12 இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிப் பெறும் என அனைவரும் எதிர் பார்த்த நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் சீசன் - 12-ல் மும்பை அணியுடன் மோதிய அனைத்து ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

HARBHAJAN TWEET

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இருப்பினும் சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தமிழ் மக்கள் மற்றும் சென்னை அணியின் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் பண்பு என்னை நெகிழ செய்தது என்றும், அடுத்த வருடம் சென்னை அணிக்கு விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன் என்று உருக்கமாகக் கூறினார். தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அளவற்ற அன்பை ஹர்பஜன் சிங் வைத்துள்ளார் என்றால் எவராலும் மறுக்க முடியாது.

HARBHAJAN SINGH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe