Advertisment

சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம் : நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதல்!

Champions Trophy starts today New Zealand  Pakistan  match

Advertisment

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி இன்று (19.02.2025) தொடங்கும் இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக இந்த தொடரில் 8 அணிகள் விளையாட உள்ளன. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியானது பாகிஸ்தானின் கராச்சி நேஷனல் மைதானத்தில் மதியம் 02.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

அதே சமயம் நாளை (20.02.2025) வங்கதேசத்தையும், பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. அதோடு இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Pakistan cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe