உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற தொடர்களிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

Advertisment

chahal about dhoni in chahal tv

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இல்லை. அதனால், தோனி இனிமேல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணியிலும் தோனி இடம்பெறாத சூழலில், இந்திய வீரர் சாஹலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வீரர்கள் பேருந்தில் செல்லும் போது ஒவ்வொரு வீரரிடமும் சென்று பேசிக்கொண்டே வந்த சாஹல், இறுதியில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்றார். அந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்த அவர், இது தோனியின் சீட். இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்கானது. நாங்கள் அவரை மிஸ் செய்கிறோம் என்றார். தோனியை களத்தில் எப்போது பார்க்கலாம் என ஏற்கனவே எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள் சாஹலின் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.