Advertisment

'7000 விக்கெட்... 60 ஆண்டு கால கிரிக்கெட் பயணம்' கிரிக்கெட் இளைஞன் ஓய்வு!

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள ஜமைக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட் . 1959 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஷையர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக சென்ற அவர்,அங்கேயே தங்கி தனது கிரிக்கெட் வாழக்கையை தொடர்ந்தார் .அதன்படி 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி இதுவரை 7,000 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது இவருக்கு 85 வயதாகும் நிலையில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் ஸ்பிரிங்ஹெட் அணிக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

vj

இது குறித்து அவர் கூறியதாவது, காயம் இல்லாமல் உடல் தகுதியை சரியாக கவனித்துக் கொண்டதால் தான் இவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம். அதிகமாக மது குடிக்க மாட்டேன், பீர் மட்டும் எப்போதாவது அருந்துவேன், பயிற்சி இல்லாமல் இருக்க்வே மாட்டேன் என தெரிவித்துள்ளார்.செசில் ரைட் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் உள்ளிட்ட முக்கிய விரர்களுடன் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe