Advertisment

"கேப்டன் 7-னோடு சாகசங்கள் காத்திருக்கின்றன" - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி தோனி!

MSD

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் இவர், 7ஆம் எண் ஜெர்சியை அணிந்து விளையாடினர். இந்தநிலையில்தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அனிமேஷன் தொடர் ஒன்று தயாராகி வருகிறது. இத்தொடருக்கு ‘கேப்டன் 7’ என பெயரிடப்பட்டுள்ளது.

தோனி என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அனிமேஷன் தொடரைதயாரிக்கின்றன. இந்தியாவின் முதல் ஸ்பை-யூனிவெர்ஸ் (SPY UNIVERSE) அனிமேஷன் தொடராக ‘கேப்டன் 7’ உருவாகவுள்ளது. தற்போது இந்த தொடருக்கான ப்ரீ -ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இதுகுறித்து மகேந்திர சிங் தோனி, “இந்தத் தொடரின் கான்செப்டும்கதையும் அருமையாக உள்ளது.இது கிரிக்கெட்டுடன் சேர்த்து எனது மற்ற ஆர்வங்களையும் உயிர்ப்பிக்கும்" என தெரிவித்துள்ளார். "கேப்டன் 7னோடுஉங்களுக்கு நிறைய சாகசங்கள் காத்திருக்கின்றன" என தோனியின் மனைவியும், தோனி என்டர்டெயின்மென்ட்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாக்ஷிதோனி தெரிவித்துள்ளார். கேப்டன் 7 அனிமேஷன் தொடரின்முதல் சீசன் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் தோனி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

animation MS Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe