Advertisment

அந்த இரண்டு சாதனைகளை இன்று படைப்பாரா தோனி?

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான தோனி, இன்று தென் ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான சாதனைகளைப் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

தென் ஆப்பிரிக்க அணியுடனான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று சென்சூரியன் மைதானத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே, தொடரை வென்றுள்ள நிலையில், இந்திய அணிக்கு இன்றைய போட்டி சவாலாக இல்லையானாலும், முக்கியமான போட்டியாகவேகருதப்படுகிறது.

Advertisment

Dhoni

இந்தப் போட்டியில் தோனி மீது குவிந்திருக்கும் இரண்டு எதிர்பார்ப்புகள்:

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நீண்ட நாட்கள் பயணித்து வரும் மகேந்திர சிங் தோனி, அதிக கேட்ச்களைப் பிடித்த இந்தியவிக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் 4 கேட்சுகளைப் பிடித்தால், 300 கேட்சுகளைப் பிடித்த நான்காவதுவிக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைப்பார். இந்தப் பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆதம் கில்கிறிஸ்ட் உள்ளார்.

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்போட்டியில் 33 ரன்களை தோனி எடுப்பாராயின், 10,000 ரன்களைக் கடந்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடம்பிடிப்பார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை சச்சின் தென்டுல்கர், கங்குலி மற்றும் டிராவிட் மட்டுமேபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

India South africa cricket ODI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe