
இங்கிலாந்து அணி, இந்தியாவில்சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று டெஸ்ட்போட்டிகள்முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் நான்காம்தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்துஇரு அணிகளும்5 இருபது ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரானஇருபது ஓவர்போட்டிக்கானஇந்திய அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியஇருபது ஓவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவருண்சக்ரவர்த்திக்கு, யோ-யோடெஸ்ட்எனப்படும்உடல் தகுதி தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அவர் தேர்ச்சியடையவில்லை. ஏற்கனவே இதுகுறித்து தகவல்கள் வெளியான நிலையில், வருண்சக்கரவர்த்தி யோ-யோடெஸ்ட்டில் தோல்வியடைந்ததை இந்திய கிரிக்கெட் வாரியநிர்வாகி தற்போது உறுதி செய்துள்ளார். யோ-யோடெஸ்டில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்திற்கு எதிரானஇருபது ஓவர் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. வருண்சக்கரவர்த்தி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரானஇருபது ஓவர் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரானநான்காவதுடெஸ்ட்போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியபும்ரா, இங்கிலாந்திற்கு எதிரானஒருநாள்போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனதகவல் வெளியாகிவுள்ளது. பும்ராவிற்கு ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர்போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)