RAHANAE - PUJARA

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ள இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கெதிரானஇருபது ஓவர் போட்டிகளில் விளையாடப்போகும்இந்திய அணி நேற்றுமுன்தினம்(09.11.2021) அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. ஏற்கனவேஇரண்டு டெஸ்டுகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், அந்தப் போட்டியில் ரோகித் சர்மா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும்தகவல் வெளியானது. மேலும், ஃபார்மில் இல்லாத ரஹானே தொடர்ந்து துணை கேப்டனாக இருப்பார் எனவும்அந்த தகவல்கள் தெரிவித்தன.

Advertisment

இந்தநிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, ஷார்துல்தாகூர், ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஃபார்மில் இல்லாத ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் அணியிலிருந்து நீக்கப்படலாம்எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.