Advertisment

சொதப்பல் பந்துவீச்சு... தரவரிசையில் சறுக்கிய பும்ரா... சாதித்த நியூஸிலாந்து வீரர்...

ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா தனது முதல் இடத்தை இழந்திருக்கிறார்.

Advertisment

bumrah loses his first place in icc ranklist

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி இந்தியாவை வைட்வாஷ் செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியிடம் தொடரை இழந்தது.

Advertisment

குறிப்பாக இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களான கோலி மற்றும் பும்ரா ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்து கோலி 75 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பிய நிலையில், பந்துவீச்சில் பும்ரா அதைவிட அதிகமாக சொதப்பினார். மூன்று போட்டிகளிலும் சேர்த்து 167 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை பும்ரா. இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பும்ரா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

team india jasprit bumrah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe