Skip to main content

ரசிகர்களுக்கு லாராவின் உருக்கமான செய்தி... வைரலாகும் வீடியோ...

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையின் பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

brian lara releases a video to his fans about his chest pain

 

 

மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக அவர் விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியுள்ள அவர், ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள அவர், "என் உடல்நிலைக்கு  என்ன நேர்ந்தது என்பது குறித்து அனைவரும் கவலைப்பட்டீர்கள் என எனக்கு தெரியும். நான் காலையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் இருந்தேன் அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவரை கலந்தாய்வு செய்வது சரி என நினைத்து மருத்துவமனையில் சேர்ந்தேன். தொடர்ந்து மார்புவலி இருந்ததால், பல கட்ட சிகிச்சைகள் நடந்தன. நான் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறேன். தொடர்ந்து என்னுடைய செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்ததால், அதை ஆஃப் செய்துவிட்டேன். நாளை நான் ஹோட்டலுக்கு திரும்பிவிடுவேன் " எனத் தெரிவித்தார். அவரின் இந்த வீடியோ கமெண்டில் பல ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

Next Story

மோசமான ஆட்டம் எதிரொலி; இருபெரும் ஜாம்பவான்களைக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

sun risers

 

2022 ஆம் ஆம் ஆண்டை அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில், தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் மெகா ஏலத்தை நடத்தவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மேற்கு இந்திய வீரரான லாரா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், யுக்தி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அதேபோல் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஸ்டெய்ன் பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர உதவி பயிற்சியாளராக சைமன் கட்டிச்சும், பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் ஸ்கவுட்டாக ஹேமங் பதானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தாண்டு ஐபிஎல்லில் மிக மோசமான ஆட்டத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளிப்படுத்திய நிலையில், புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

"தோனி இதை செய்தால் சி.எஸ்.கே கோப்பையை வெல்லும்" - பிரையன் லாரா கணிப்பு!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

ms dhoni brian lara

 

ஐ.பி.எல் தொடரில் நேற்று (19.04.2021) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 188 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

 

வெற்றிக்குப் பிறகு பேசிய தோனி, தனது ஃபிட்னெஸ் குறித்து பேசினார். அப்போது அவர், "24 வயதில் எப்படி ஆடுவேன் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கவில்லை. 40 வயதிலும் நான் எப்படி ஆடுவேன் என்ற உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியாது. ஆனால் குறைந்தபட்சம், மக்கள் இவருக்கு ஃபிட்னெஸ் இல்லை என என்னை நோக்கி கை காட்டாமல் இருந்தால், அது எனக்கு சிறந்து விஷயமாக இருக்கும்" என தெரிவித்தார்

 

இந்தநிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா, தோனி ஓய்வெடுத்துக்கொண்டு களமிறங்கலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில், “பேட்டிங்கில் தோனியிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. அவர் கையில் க்ளோவ்ஸ் இருக்கிறது. கேட்ச் பிடிக்க வேண்டும். ஸ்டம்பிங் செய்ய வேண்டும்தான். ஆனால் சி.எஸ்.கே பேட்டிங் ஆர்டர் நீளமானது. அதனால் தோனி கொஞ்சம் ஓய்வெடுக்கலாம். அவர் ஃபார்மில் இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். அவர் எவ்வளவு அதிரடியாக பேட் செய்வார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் தற்போது நிறைய சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் தோனி, அணியிலிருக்கும் ஒவ்வொரு வீரரிடமும் சிறப்பான ஆட்டத்தைப் பெறுவதில் கவனம் செலுத்தினால், சென்னை அணி கோப்பையை வெல்லும் எனவும் லாரா தெரிவித்துள்ளார்.